17 ஆம் நூற்றாண்டு

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். புலித்தேவன், வேலு நாச்சியார், வாண்டாயத் தேவன், வெள்ளையத்தேவன், பாஸ்கர சேதுபதி, ரகுநாத சேதுபதி, அழகு முத்துக்கோன் சேர்வை, வீர பாண்டிய கட்டபொம்மன், கோபால் நாயக்கர் மருது பாண்டியர், ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

விளம்பரம்

Thamizh.org