ஆடு புலி ஆட்டம்

ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இவ்வாட்டம் விளையாடப்படுகிறது. இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு. சங்கப்பாடல் இதனை ‘வங்கா வரிப்பாறை’ என்று குறிப்பிடுகிறது.இந்தியாவின் பிற பகுதிகளிலும் விளையாடப்படும் இவ்வாட்டம் வெவேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. இது சிறுபாடு விளையாட்டு என்பது தமிழர் கொள்கை.

விளம்பரம்

Thamizh.org