ஆரண்யகம்

அமைதியாகக் காட்டிற்குச் சென்று அங்கு கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளைக் கொண்டமையால் ஆரண்யகங்கள் என்ற பெயர் பெற்றன. வேள்விகளைச் செய்ய இயலாத முதியவர்கள், துறவிகள் ஓய்வு பெற்று காட்டிற்குச் சென்று பின்னர் கற்பதற்காக உருவானவை. இவற்றில் வேள்வியை விட அமைதியான தியானமே மிகவும் மேலானது என்று வலியுறுத்தப்படுகிறது. அநுபூதி நெறிகள் மற்றும் தத்துவக் கருத்துகள் அடங்கிய கருத்துப் பெட்டகம் எனலாம். ஆரியர்கள் ஆன்மிகத் துறையில் அடைந்த பண்பாட்டின் உன்னத நிலையை எடுத்துக்காட்டுவனவாகும்.

விளம்பரம்

Thamizh.org