திரைப்படப் பாடகர்கள்

அன்றைய திரைப்படங்களில் பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது. இரவல் குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக நடிக்க முடிந்தது. பி. யு. சின்னப்பா, எம். கே. தியாகராஜ பாகவதர்,டி. ஆர். மகாலிங்கம் என அன்று புகழ்பெற்ற நடிகர்கள் யாவரும் வாய்ப்பாட்டில் வல்லவர்கள், கர்நாடக சங்கீதம் நன்கு பயின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இசை வல்லுநர்களான எம். எம். தண்டபாணி தேசிகர்,ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி போன்றோரும் தமிழ்த் திரையுலகில் பிரகாசித்தனர்.
இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின், பின்னணி பாடகர்கள் வர, இசை வல்லுனர்கள் நடிகர்களாக ஜொலித்த காலம் முடிவுற்றது. இப்போது பல கர்நாடக இசை வல்லுநர்கள் வெற்றிகரமான பின்னணி பாடகர்களாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thamizh.org