முதல் திரையரங்கு

1905 இல் திருச்சி புகையிரதத்தில் வேலை பார்த்து வந்த "சுவாமிக்கண்ணு வின்சென்ட்" என்பவர், 'எடிசன் சினிமாட்டோகிராப்' என்ற திரைப்படம் காண்பிக்கப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தார். தென்னிந்தியாவின் முதல் அரங்காக இத்திரையரங்கு விளங்கியது."சுவாமிக்கண்ணு வின்சென்ட்" பல ஊர்களுக்குச் சென்று "இயேசுவின் வாழ்க்கை" என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த "ரயிலின் வருகை' (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கோயம்புத்தூரில் "வெரைட்டி ஹால்" என்ற அரங்கை அமைத்து, "வள்ளி திருமணம்" போன்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.
நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில் அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டிருக்கிறார். ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார்.
1914 ஆம் ஆண்டு சென்னையில் "வெங்கையா" என்பவரால் கட்டப்பட்ட "கெயிட்டி" அரங்கே இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு (இத்திரையரங்கு இன்றளவும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது).

விளம்பரம்

Thamizh.org