தடய அறிவியல்

தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களைச் சேகரித்து தடயவியல் வல்லுனர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர். மருந்தியல், சோதனை, கள அறிவியல் என்ற மூன்று வகையில் தடவியல் பணி அமைகிறது. காவல்துறை, சட்ட அமலாக்கத் துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் முதலியன தடய அறிவியல் துறையை நாடுகின்றன.தற்காலத்தில் பெண் தடய அறிவியல் ஆய்வாளர்களும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.

விளம்பரம்

Thamizh.org