கடியேர்

'கடி ஏர்' என்னும் தொடரிலுள்ள கடி என்னும் சொல்லுக்குக் காப்பு என்று பொருள் கொள்ள வேண்டும். மழை காக்கவேண்டும் என்று வேண்டி ஆண்டில் முதல்முதலாக ஏர் பூட்டுவது கடியேர். அண்மைக்காலம் வரையில் 'நல்லேர்' பூட்டும் விழா தமிழத்தில் நடைபெற்று வந்தது. கோடை காலத்தில் முதல்மழை பெய்ததும் ஊரார் அனைவரும் கூடி ஊரின் பொதுநிலத்தில் ஏர் பூட்டி உழுவர். இதனை நல்லேர் விழா என்பர்.
மதுரைக்காஞ்சி என்னும் சங்ககால நூல் இந்த நல்லேர் விழாவைக் குறிப்பிடுகிறது.
வானம் கடியேர் பூட்டி பேர்யாற்றுக் கரையை உடுத்து உழுதது எனக் கூறுவது கடியேர் விழாவினை நினைவூட்டுகிறது.

விளம்பரம்

Thamizh.org