பாண்டியர்

பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. இதுவே இவர்களைப் பற்றிய வரலாறு புராணங்களாகவும், இலக்கியங்களாகவும், காப்பியங்களாகவும், இதிகாசங்களாகவும், நாட்டுப்புறக் கதைகளாகவும் வளர வழிவகுத்து இவர்கள் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் இல்லாமல் செய்கின்றன.

விளம்பரம்

Thamizh.org