பூண்

பூண் என்பது ஆண்மகன் குறிப்பாக அரசன் மார்பில் கவசம்போல் அணியும் அணிகலன். உலக்கைப் பூண் என்பது உலக்கை மரத்துக்கு இரும்பால் போடப்பட்டுள்ள கவசம். அதுபோல மார்பில் அணியும் கவசம் பூண் என்பதை “கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம் தேவர்கோன் பூண் ஆரம் தென்னர்கோன் மார்பினவே” எனும் பாடல் மூலம் அறியமுடிகிறது.
“சுடர்தொடீ கேளாய்”என்னும்போது சுடரும் தொடி அணிந்த பெண்ணை உணர்த்தும் அன்மொழித்தொகையாக நிற்பது போல பசும்பூண் என்னும் தொடரும் அமைந்து அதனை அணிந்த அரசனை உணர்த்தும் முறைமை சங்கநூல்களில் உண்டு.
மேலும் பசும்பூண், பொலம்பூண், நறும்பூண் பெரும்பூண் போன்ற தொடர்கள் மன்னனுக்கு அடைமொழியாய் அமைந்து குறிப்பிட்ட மன்னனை உணர்த்துகின்றன. இந்த மன்னர்களோடு தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகள் எந்த மன்னனைச் சாரும் என்பதைக் கண்டறிய இந்தத் தொடர்கள் உதவுகின்றன.

விளம்பரம்

Thamizh.org