தமிழ் எண் கணித சோதிடம்

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம்.
ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட எண்கள் என்று எப்படி தேர்வு செய்யப்படுகிறது? ஒவ்வொருவர் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகையைக் கொண்டு அதற்கான எண்கள் கண்டறியப்படுகிறது. உதாரணமாக, முத்துக்கமலம் பிறந்த நாள் 21-03-1999 என்று வைத்துக் கொள்வோம்.
முத்துக்கமலத்தின் பிறந்த நாள் 21 என்பதால் இவரின் பிறந்தநாளின் கூட்டுத்தொகை 3.
பிறந்த நாள் வழியிலான எண் - 3
முத்துக்கமலம் ஆங்கில எழுத்துக்களின்படி MUTHUKAMALAM பெயரின் கூட்டு எண் - 5
4+6+4+5+6+2+1+4+1+3+1+4 = 41 = 5
ஆங்கிலப் பெயர் வழியிலான எண் - 5
ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள்
A, I, J, Q, Y - 1 B, K, R, - 2 C, G, L, S - 3 D, M, T - 4 E, H, N, X - 5 U, V, W - 6 O, Z - 7.

விளம்பரம்

Thamizh.org