தொல்காப்பியர்

தொன்மைக்(முந்தைய) காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக்குடும்பத்தினைச் சுருக்கமாக குடி என்பர்.'குடி உயர கோல் உயரும்' என்பது பழமொழி ஆகும். ஒவ்வொரு குடிக்கும், ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்தத காப்பியருள், இந்நூல் ஆசிரியனும் ஒருவன். எனவே, தொல்காப்பியன் எனப்பட்டான். இன்று மரியாதைக் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார்.தொல்காப்பியத்தினை எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்திலும் (கி. மு. 200) முற்பட்டவர் என திரு. கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.

"தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஜந்நூறு ஆண்டுகளுக்குப்பிற்பட்டவராதல் இயலாது" என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.


விளம்பரம்

Thamizh.org