உதகை

உதகை 2,637 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நகரம். தொட்டபெட்டா சிகரம் உதகையில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே உயரமானது, தொட்டபெட்டா. தொட்டபெட்டாவின் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும், 2466 மீ உயரமுள்ள எல்க்ஹில்லும் உள்ளன உதகையின் முக்கிய சுற்றுலா தாவரவியல் பூங்கா. உதகை தாவரவியல் பூங்கா 1847-67 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. கேத்தி பள்ளத்தாக்குக் காட்சி உலகிலேயே இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற புகழைப் பெற்றது. உதகை ஏரி படகு இல்லம் ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஏரி. 1823-1825 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.

விளம்பரம்

Thamizh.org