சோதிடமும் வான்குறியியலும் (astrology)

கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு:
சூரியன் (ஞாயிறு Sun),சந்திரன் (திங்கள் Moon),செவ்வாய் (Mars),புதன் (அறிவன் Mercury),குரு (வியாழன் Jupiter),சுக்கிரன் (வெள்ளி Venus),சனி (காரி Saturn),இராகு (நிழற்கோள்),கேது (நிழற்கோள்).

கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:
மேடம் (மேஷம்),இடபம் (ரிஷபம்),மிதுனம்,
கர்க்கடகம் (கடகம்),சிங்கம் (சிம்மம்),கன்னி,துலாம்,விருச்சிகம்,தனு (தனுசு),மகரம்,கும்பம்,மீனம்.

விளம்பரம்

Thamizh.org