திரைப்பட வசனம்

திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த மணிமேகலை திரைப்படத்திற்கு சோமையாஜுலுவும், 1943 ஆம் ஆண்டு வந்த சிவகவி திரைப்படத்திற்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்த்துப் பெற்றனர். திரைப்படத்தில் வார்த்தை ஜாலங்களின் ஆதிக்கத்தை இது மேலும் வலுப்படுத்தியது. மாறாக பிம்பங்கள் மூலம் கதையை நகர்த்தும் திறமை வளரவில்லை. இன்றளவும் பாத்திரப் பேச்சு தமிழ் திரைப்படங்களில் ஓங்கியிருப்பது திரைப்படத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றது. தமிழின் தொன்மை, இனிமை, தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு ஆகியன, உரையாடல் மற்றும் பாடல்களாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடம் பெற்றன. 1953 ஆம் ஆண்டு வெளிவந்த ஔவையார் திரைப்படம் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

விளம்பரம்

Thamizh.org