ரேகைகள்

வழக்கமாக, சோதிடர் அல்லது வாசிப்பாளர் (வாசிப்பாளர் என்பதே பொருத்தமாகும்) சோதிடம் பார்க்கவருபவர்களின் கை கட்டை விரலின் கைரேகையை பெற்கின்றனர். ஆண்களாயிருந்தால் வலது கை கட்டைவிரல், பெண்களாயிருந்தால் இடதுகை கட்டை விரல் ரேகையினை பெறுகின்றனர். பின் அந்த ரேகைக்கு பொறுத்தமான சுவடிக் கட்டுகளை அவர்கள் குறைந்த பட்சமாக சேமித்து வைத்துள்ள களஞ்சியத்திலிருந்து தேடுகின்றனர். அக்கட்டுகளிலிருந்து அவருடையை (சோதிடம் பார்க்கும் நம்பிக்கையாளரின்) தனி பனை ஒலையை பிரித்தெடுக்கின்றனர். இதற்காக அவர்கள் கேட்கும் சில கேள்விகளைத் தொடுக்கின்றனர் அதற்கு ஆம் இல்லை என்ற பதிலை மட்டுமே தந்தால் போதும். சிலருடைய ஒலை இரண்டு கேள்விகளிலேயே கிடைத்துவிடும்.

விளம்பரம்

Thamizh.org