திருவாய்மொழித் திருவிழா

அத்யயணோற்சவம் அல்லது திருவாய்மொழித் திருவிழா அல்லது நாலாயிர திவ்யப்பிரபந்தத் திருவிழா என்பது வைணவத் திருத்தலங்களான திவ்வியதேசங்களில் கொண்டாப்பெறும் விழாவாகும். சமஸ்கிருத வேதங்களுக்கு நிகராக ஆழ்வார்கள் இயற்றிய திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை முன்நிறுத்த இராமானுஜர் அவர்களால் இவ்விழா திருவரங்கத்தில் முதன்முதலாக தொடங்கப்பெற்றது. பின்பு அனைத்து திவ்ய தேசங்களிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா மார்கழி மாதத்தில் பத்து நாள் விழாவாக கொண்டாப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படுவது 'பகல் பத்து' அல்லது 'திருமொழித் திருநாள்' எனவும் வைகுண்ட ஏகாதசியை அடுத்த பத்து நாட்கள் கொண்டாடப்படுவது 'இராப் பத்து' அல்லது 'திருவாய்மொழித் திருநாள் எனவும் அழைக்கபப்டுகிறது.

விளம்பரம்

Thamizh.org